விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பினால்... இங்கிலாந்தை எச்சரிக்கும் வீரர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

Feb 8, 2024 - 06:59
Feb 8, 2024 - 07:19
விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பினால்... இங்கிலாந்தை எச்சரிக்கும் வீரர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் திகதி நடைபெற உள்ளது.

இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி 3-வது போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வருவார் என்று நம்பப்படுகிறது. 

இந்நிலையில் 3-வது போட்டியில் விராட் கோலி வந்தால் இந்திய அணி இரக்கமற்றதாக மாறி மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று இங்கிலாந்து அணியை முன்னாள் கேப்டன் நாசர் உசேன் எச்சரித்துள்ளார்.

மேலும் விராட் கோலி மற்றும் இங்கிலாந்தின் மகத்தான பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் மீண்டும் மோதுவதை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"கோலி மீண்டும் விளையாட வருவார் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் மோதுவது மட்டுமே தவறியுள்ளது. அதற்காக நான் காத்திருக்கிறேன். 

இதுவரை பேட்டிங் செய்த 4 இன்னிங்சில் இந்தியா 3-ல் சொதப்பலாக செயல்பட்டது. அதில் சுமாராக அவுட்டானதற்காக ராகுல் டிராவிட் தங்களுடைய வீரர்களை திருத்துவார் என்பதை நான் அறிவேன்.

தற்சமயத்தில் இங்கே இங்கிலாந்து அணி மூச்சு விடுவதற்கு வழியை கொடுக்கும் நாம் இனிமேல் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கும். மேலும் விராட் கோலி போன்ற முற்றிலும் இரக்கமற்றவர் வரும்போது அது அதிகமாக இருக்கும்" என்று கூறினார்.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...