காவி துண்டு போட்டு பாபர் அசாம்க்கு வரவேற்பு.. வெடித்த சர்ச்சை.. நடந்தது என்ன? 

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

செப்டெம்பர் 29, 2023 - 11:41
காவி துண்டு போட்டு பாபர் அசாம்க்கு வரவேற்பு.. வெடித்த சர்ச்சை.. நடந்தது என்ன? 

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

ஹைதராபாத்தில் வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். 

இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் தங்களுக்கு கிடைத்த அன்பு குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்போது ஹோட்டல் நிர்வாகம் சார்பாக பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆல் தி பெஸ்ட் சாம்பியன்ஸ் என்ற பதாகையுடன் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலககோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இவைதான்! பிரபலங்கள் கணிப்பு

மேலும் வீரர்கள் உள்ளே வரும்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு சால்வை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வேண்டுமென்றே காவி நிற சால்வை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பாபர் அசாம் காவிநிற சால்வையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.

இதை வைத்து இந்திய ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்தார்கள். வேண்டுமென்றே காவி நிற சால்வை போர்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ரசிகர்களும் குற்றம் சாட்டினர். 

இந்த நிலையில் பாபர் அசாமுக்கு காவி நிற சாவை போர்த்தப்பட்டது உண்மை என்றாலும் அது வேண்டுமென்றே நடந்த நிகழ்வு கிடையாது. பாகிஸ்தான் வீரர்களுக்கு பச்சை, இளஞ்சிவப்பு, காவி என பல நிறங்களில் சால்வை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் காவி நிற சால்வை அணிந்த பாபர் அசாம் போட்டோ மட்டும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!