சச்சின் சாதனையை காலி செய்து ரோஹித் சர்மாவின் மெகா ரெக்கார்டுக்கு குறி வைத்த வார்னர்

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் அடித்தார். இது அவரது ஆறாவது உலகக்கோப்பை சதம் ஆகும். 

ஒக்டோபர் 26, 2023 - 10:49
சச்சின் சாதனையை காலி செய்து ரோஹித் சர்மாவின் மெகா ரெக்கார்டுக்கு குறி வைத்த வார்னர்

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் அடித்தார். இது அவரது ஆறாவது உலகக்கோப்பை சதம் ஆகும். 

இதன் மூலம், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை முந்தி இருக்கிறார் டேவிட் வார்னர். அடுத்து ரோஹித் சர்மாவின் சாதனைக்கு தான் அவர் குறி வைத்து இருக்கிறார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் துவக்கம் முதலே தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். 93 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார் வார்னர். 

ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் இது டேவிட் வார்னரின் ஆறாவது சதம் ஆகும். இலங்கையின் குமார் சங்ககாரா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஐந்து உலகக்கோப்பை சதங்கள் அடித்து இருந்தனர். 

அத்துடன், ஆறு உலகக்கோப்பை சதங்கள் அடித்து இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக ஆறு உலகக்கோப்பை சதங்கள் அடித்துள்ளார் வார்னர். 

எனினும், சச்சின் 44 இன்னிங்க்ஸ்களில் ஆறு சதம் அடித்து இருக்கும் நிலையில், வார்னர் 23 இன்னிங்க்ஸ்களில் ஆறு சதம் அடித்து அவரை முந்தி இருக்கிறார். தற்போது இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். வார்னர்

அதிக உலகக்கோப்பை சதம் அடித்த வீரராக ரோஹித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஏழு சதம் அடித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு சதம் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ரோஹித் சர்மா 22 இன்னிங்க்ஸ்களில் 7 உலகக்கோப்பை சதம் அடித்துள்ள நிலையில் அடுத்து அந்த சாதனையை இந்த உலகக்கோப்பை தொடரிலேயே வார்னர் முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்த நிலையில், நெதர்லாந்து அணி வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக 309 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!