மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் எனக்கு சிரமம் இல்லை - மைத்திரி

மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 29, 2023 - 13:48
மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் எனக்கு சிரமம் இல்லை - மைத்திரி

மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், திருமதி சிறிமாவோவுக்குப் பிறகு உலகையே வென்ற ஒரே ஜனாதிபதி தாம் தான் என்று கூறினார்.

“எந்த அரசியல் கட்சியிலும் நீலம், பச்சை, சிவப்பு என்று சொல்பவர்கள் இல்லை. இன்று தொழிலதிபர்கள் மகிழ்ச்சியாக இல்லை, அரச ஊழியர் மகிழ்ச்சியாக இல்லை, மீனவர்கள் மகிழ்ச்சியாக இல்லை, சாதாரண குடிமகன் மகிழ்ச்சியாக இல்லை. 

நாட்டில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள்  பிரச்சினைகள் மிகவும் கடுமையானவை, அவற்றை ஒழிப்பதிலும் ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் திறமையான ஏற்பாடுகள் அவசியாகும்.

கட்சியாக, நாங்கள் அதற்கான தீர்வுகள் வேண்டும். ஜனாதிபதியாக இருந்தவர் என்ற வகையில் அந்த அனுபவத்துடன் மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் எனக்கு சிரமம் இல்லை.

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு எனது நல்லாட்சி காலம் முழு உலகையும் வென்ற காலம் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறுகின்றேன். " என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!