நான் அவனுக்கு அக்கா இல்லை  அம்மா - எமோஷலான நடிகை தேவயானி 

சென்னையில் நடைபெற்ற ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகையும், நடிகர் நகுலின் அக்காவுமான தேவயானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

ஜுலை 22, 2024 - 13:23
நான் அவனுக்கு அக்கா இல்லை  அம்மா - எமோஷலான நடிகை தேவயானி 

நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நடிகர் நகுல் தனக்கு செட் ஆகும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்ற ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகையும், நடிகர் நகுலின் அக்காவுமான தேவயானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

அங்கு பேசிய தேவயானி ” நான் நகுல் அக்கா என்பதை தாண்டி அவருடைய ரசிகை என்று தான் சொல்லவேண்டும். பாய்ஸ் படத்தில் இருந்து அதற்கு அடுத்ததாக காதலில் விழுந்தேன் படத்தில் நடித்த விதம் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். 

அந்த அளவிற்கு முழுவதுமாக வித்தியாசமாக மாறி வேறுமாதிரி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த மாதிரி ஒரு பல திறமைகளை கொண்ட நடிகர் என்னுடைய தம்பி நகுல். 

நல்ல கதையும், நல்ல இயக்குனரும் கிடைத்தது என்றால் கண்டிப்பாக அவருடைய படம் பெரிய அளவில் பேசப்படும். என்னுடைய தம்பி என்ற காரணத்தால் நான் இதனை சொல்லவில்லை. 

உண்மையாகவே அவன் நல்ல நடிகர். அவர் நடித்துள்ள இந்த வாஸ்கோடகாமா படத்திற்கு நல்ல ஆதரவு கொடுங்கள். நகுலிற்கு நான் அக்கா மட்டும் இல்லை அவனுக்கு நான் அம்மா.  படம் நன்றாக வந்து இருக்கிறது” எனவும் நடிகை தேவயானி தெரிவித்துள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!