ஜன்னல் திரையை மூட மறந்த காதலர்கள்: வேடிக்கை பார்த்த மக்கள்... போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்

அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

ஜுன் 26, 2025 - 09:50
ஜன்னல் திரையை மூட மறந்த காதலர்கள்: வேடிக்கை பார்த்த மக்கள்... போக்குவரத்து நெரிசலால் திணறிய மேம்பாலம்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய காதலர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு ஜன்னல் திரையை மூட மறந்துவிட்டு அறையில் உல்லாசத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அந்த ஹோட்டல் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற நபர், இதனை கவனித்து வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

அத்துடன், அந்த மேம்பாலத்தின் வழியே வாகனங்களில் சென்றவர்கள், ஆங்காங்கே நிறுத்தி சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறையை நோக்கி வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டனர்.

இதனால், அந்த மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேம்பாலம் திணறியது. ஆங்காங்கே வாகனங்கள் நகர முடியாமல் சிக்கி தவித்தது. 

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த அறையை தட்டி, ஜன்னலை மூட செய்ததோடு, அங்கு கூடியிருந்த மக்களையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். 

காதலர்களின் தனிப்பட்ட செயல்களை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

அத்துடன், ஜன்னல் திரையை மூடாமல் கவனக்குறைவாக இருந்த காதலர்களை பலரும் கண்டித்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!