நள்ளிரவில் பாகிஸ்தானின் 9 இடங்கள் மீது தாக்குதல்... ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி?
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன.
அதன்படி இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
9 இலக்குகளும் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொது மக்கள் குடியிருப்பு மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்பு படையினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நள்ளிரவில் தாக்குதலை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
இதயும் படிங்க: பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல்.. பஹல்காம் சம்பவத்துக்கு இந்தியா பதிலடி..!
அதன்படி துல்லியமாக தாக்கும் திறன்படைத்த அதிநவீன குண்டுகளை பயன்படுத்தி இலக்குகளை குறிவைத்து முப்படைகளும் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தின.
மேலும் பஹல்காமில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர் இந்திய உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு தாக்குதல் அரங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயும் படிங்க: பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து!
அதேபோல், தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் மீண்டும் தாக்குதல் தேவையா? என கண்காணிப்பு தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகு தாக்குதலை அரங்கேற்றிய முப்படைகள் தயாராகியுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஒரு குறிப்பிட்ட சிலருக்கே தகவல் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.