இதுவரை இல்லாத அளவாக உலக சாம்பியனுக்கு பரிசு அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9வது உலக கோப்பை தொடருக்கான பரிசு விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

உலக கோப்பை டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.20 கோடி பரிசளிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9வது உலக கோப்பை தொடருக்கான பரிசு விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
முதலிடம் பிடித்து கோப்பையை முத்தமிடும் அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட உள்ளது. 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி கிடைக்கும்.
அரையிறுதியுடன் வெளியேறும் 2 அணிகளுக்கு தலா ரூ.5.5 கோடி உள்பட 5 முதல் 20 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கும் பரிசு வழங்கப்படும்.
இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.93 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.