அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை? வெளியான தகவல்

சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தி பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை இன்று (3) மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்து இருந்தது.
எனினும், அரச அல்லது தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு திணைக்களங்களுடன் கலந்துரையாடிய பின்னர் இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.