கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியானது
விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு அடுத்த நாளான எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கு அமைய, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விசேட விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.