அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை.. அறிவிப்பு வெளியானது!

13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின்  கூறியுள்ளது.

நவம்பர் 11, 2023 - 00:22
அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை.. அறிவிப்பு வெளியானது!

தீபாவளியை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின்  கூறியுள்ளது.

முன்னதாக, மத்திய மாகாணம், சபரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.  

வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.  

இந்த நிலையிலேயே  நாட்டில் உள்ள அனைத்து  தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!