கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாண்டு அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு
மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதாவது, 36,480 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளிலும் பார்க்க மிக அதிகமான தொற்று அளவை எட்டியுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின் படி, 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் முறையே 31,139, 35,054 மற்றும் 76,467 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எனினும், 2023ஆண்டு நேற்று (05) வரை மொத்தம் 78,022 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 16,509 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதாவது, 36,480 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது டெங்கு நோயாளர்களில் 47 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
இதேவேளை, இலங்கையில் டெங்கு நோயினால் 46 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.