ஹட்டன் பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விசேட விடுமுறை!
ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.

ஹட்டன் கல்வி வலய தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனை, மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
ஆலய நிர்வாகம் மற்றும் பல தரப்பினராலும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை தமிழ் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.