வடக்கு - கிழக்கில் ஹர்த்தால் - லியோ திரைப்படம் குறித்து வெளியான தகவல்!
வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்றைய தினம் நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்துமாறு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
எனினும், அவ்வாறு எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் யாருக்கும் அனுப்பவில்லை என்று கட்சித் தலைவர்கள் தெரிவிக்கினறனர்.
இதனையடுத்து, கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.