கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாத ஆளு; ஹர்திக் பாண்டியாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் பல மோசமான தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது.

Apr 23, 2024 - 09:47
Apr 23, 2024 - 09:47
கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாத ஆளு; ஹர்திக் பாண்டியாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான படுதோல்வியை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை, நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பு திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

படுதோல்விக்கு இது மட்டுமே காரணம்; ஹர்திக் பாண்டியா வேதனை!

அத்துடன், ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியில் இருந்து ட்ரேட் செய்து அவரையே தனது புதிய கேப்டனாகவும் நியமித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த திடீர் முடிவு மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவை ஏற்று கொள்ளாத மும்பை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு தொடரை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் பல மோசமான தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது.

வலுவான அணிகளுள் முதன்மையான அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. 

சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் சிலர் தற்போதைய மும்பை  இந்தியன்ஸ் அணி அனைத்து வகையிலும் மோசமான அணியாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் இதுவரை 8 போட்டிகளை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது, மற்ற போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்தது. 

கடைசியாக நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற போதிலும் ஹர்திக் பாண்டியா சம்பந்தமே இல்லாமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததே தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்ப்படுகிறது. 

அதே போன்று ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சொதப்பியதும், பந்துவீச்சாளர்களை சரியாக கையாளாகததும் மும்பை ரசிகர்கள் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவை தங்களது சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.