படுதோல்விக்கு இது மட்டுமே காரணம்; ஹர்திக் பாண்டியா வேதனை!

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Apr 23, 2024 - 09:45
படுதோல்விக்கு இது மட்டுமே காரணம்; ஹர்திக் பாண்டியா வேதனை!

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற போதிலும் பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, சரியாக செயல்படாமல் சொதப்பி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களும், வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.இதன்பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஜெய்ஸ்வால் 104* ரன்களும், சாம்சன் 38* ரன்களும், பட்லர் 35 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.4 ஓவரில் இலக்கை மிக இலகுவாக எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான படுதோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

“எங்களது இந்த தோல்விக்கு நாங்கள் தான் காரணம். எங்கள் மீது நாங்களே அழுத்தத்தை ஏற்படுத்தி கொண்டோம். திலக் வர்மா மற்றும் வதேரா ஆகியோரின் பேட்டிங் பிரமிப்பை ஏற்படுத்தியது. நாங்கள் விரைவாக சில விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் 180 ரன்களை இந்த போட்டியில் எங்கள் எடுக்க முடியும் நான் நினைத்து கூட பார்க்கவில்லை. 

பேட்டிங்கின் போது கடைசி ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை, இதனால் தான் எங்களால் வெற்றிக்கு போதுமான இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பந்துவீச்சின் போதும் நாங்கள் சரியாக செயல்படவில்லை, பீல்டிங்கிலும் சொதப்பிவிட்டோம். எந்த ஒரு வீரரையும் தனிப்பட்ட முறையில் சுட்டி காட்டுவது சரியாக இருக்காது.

ஒவ்வொரும் தங்களது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும், தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து வகையிலும் எங்களைவிட சிறப்பாக செயல்பட்டது என்பதே உண்மை. ஒரு அணியாக நாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். 

ஒரிரு போட்டிகளின் முடிவை வைத்து ஆடும் லெவனில் இருந்து சில வீரர்களை நீக்குவது ஏற்புடையது அல்ல, எனது வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதே முக்கியம் என கருதுகிறேன். தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.