நடிகை ஹனிரோஸ் தொடர்பில் ஆபாச கருத்து: 27 பேர் மீது வழக்குப்பதிவு
நடிகை ஹனிரோஸ் தெரிவித்த இந்த குற்றச்சாட்டு மலையாளம் மற்றும் தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை ஹனிரோஸ் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஹனி ரோஸ் குற்றம் சாட்டினார்.
கேரள தொழிலதிபர் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், தனது உடல் அமைப்பை குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நடிகை ஹனிரோஸ் தெரிவித்த இந்த குற்றச்சாட்டு மலையாளம் மற்றும் தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தனக்கு எதிராக சமூக வலை தளங்களில் ஆபாசமான கருத்து தெரிவித்தவர்களின் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
அவர் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலை யத்தில் நேற்று புகார் செய்தார். மொத்தம் 30 பேர் மீது நடிகை புகார் கூறியி ருக்கிறார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீ சார், 27 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். அவர்களின் மீது பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.