சற்று முன்னர் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள பரீட்சை முடிவுகள்!
2019, 2020, 2021, 2022 (2023) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பரீட்சை முடிவுகளே இவ்வாறு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுத் தகவல் தொழில்நுட்ப (General Information Technology) பரீட்சை முடிவுகளை, பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
2019, 2020, 2021, 2022 (2023) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பரீட்சை முடிவுகளே இவ்வாறு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் முடிவுகளை காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
நாடளாவிய ரீதியில் 3,269 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற GIT பரீட்சைக்கு 517,803 பாடசாலை பரீட்சார்த்திகளும் 3,269 தனியார் பரீட்சார்த்திகளும் என மொத்தம் 521,072 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.