இரவு நேர பணியில் பெண்கள்... எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் இரவு 10 மணிக்குப் பின்னரும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என கூறப்படுகின்றது.

இரவு நேர பணியில் பெண்களை ஈடுபடுத்துவது தொடர்பில் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் இரவு 10 மணிக்குப் பின்னரும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என கூறப்படுகின்றது.
மின் கட்டணம் செலுத்துவது தொடர்பில் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
அத்துடன், பெண்களின் நலன், பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, ஓய்வு வசதி உள்ளிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவன உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என புதிய திருத்தத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 18 வயதை எட்டிய பெண்களை மட்டுமே இவ்வாறு பணியில் அமர்த்த முடியும் எனவும் இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.