தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி

சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 664,319 ரூபாயாக பதிவாகியுள்ளது.

டிசம்பர் 6, 2023 - 21:37
தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி

நாட்டில் இன்றைய தினம் (06) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய தகவல்களின் படி, தங்க அவுன்ஸின் விலையானது 662,992.80 ரூபாயாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சற்று வீழ்ச்சியாகும்.  

சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 664,319 ரூபாயாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,440 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 187,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 171,900 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,490 ரூபாயாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,510 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 164,100 ரூபாயாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!