இன்று மேலும் வீழ்ச்சியடையந்த தங்கத்தின் விலை

நாட்டில்  இன்று(28) தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும் போது சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜுன் 28, 2023 - 16:53
இன்று மேலும் வீழ்ச்சியடையந்த தங்கத்தின் விலை

நாட்டில்  இன்று(28) தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும் போது சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 592,435 ரூபாயாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்  167,200  ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று  153,300  ரூபாயாக பதிவாகியுள்ளது.  

அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,300 ரூபாயாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.  எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!