தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான முக்கிய தகவல்
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உலக சந்தையில் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (19) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உலக சந்தையில் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (19) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் இன்றைய தங்கம் விலை
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை711,039 ரூபாயாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் ஒன்று 25,090 ரூபாயாகவும் 24 கரட் தங்கப் பவுண் 200,650 ரூபாயாக உள்ளது.
22 கரட் தங்க கிராம் 23,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் 184,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,96 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 175,650 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வந்தது. ஆனால் இன்று சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,695 ஆகவும் சவரன், ரூ.53,560 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, 6,696 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 8 அதிகரித்து, 53 ஆயிரத்து 568 ஆக உள்ளது.
கடந்த மாதங்களில் 50 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது 55 ஆயிரத்தை நெருங்கி செல்வது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.