ஹட்டனில் ரயிலின் முன் பாய்ந்து யுவதி மரணம்

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 9, 2023 - 15:50
ஹட்டனில் ரயிலின் முன் பாய்ந்து யுவதி மரணம்

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் (09) காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய யுவதியே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக குறித்த யுவதி காதலில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பதுளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து ஹட்டன் மல்லியப்பு பகுதியில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!