வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்
சில புதிய வாகனங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சில புதிய வாகனங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சில புதிய வாகனங்களைக் இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய ரக வாகனங்கள் அரச நிறுவனங்களின் தங்களது கள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கு தேவையான சில வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கல்வி அமைச்சு மற்றும் கடற்படைக்கு இரண்டு புதிய பஸ்களும், ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மூன்று அதி சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.