இளம் வீரருக்கு ஆதரவு.. அணியில் வாய்ப்பு: கம்பீரின் முடிவுக்கு பிசிசிஐ அதிருப்தி!

புவனேஷ்வர் குமார், ஷிகர் தவன் போன்றவர்கள் உள்ளூர் தொடர்களில் அதிரடி கம்பேக் கொடுக்கும் பட்சத்தில், மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 16, 2024 - 11:12
இளம் வீரருக்கு ஆதரவு.. அணியில் வாய்ப்பு: கம்பீரின் முடிவுக்கு பிசிசிஐ அதிருப்தி!

இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் இனி உள்ளூர் தொடர்களில் ஆட வேண்டும், அந்த உள்ளூர் தொடர்களில் அவர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.

புவனேஷ்வர் குமார், ஷிகர் தவன் போன்றவர்கள் உள்ளூர் தொடர்களில் அதிரடி கம்பேக் கொடுக்கும் பட்சத்தில், மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

அதேபோல், டி20 அணியில் மட்டும் இடம்பிடித்து வரும் சூர்யகுமார் யாதவ், மூன்று பார்மெட்டிலும் இடம்பெற இதுவொரு அருமையாக வாய்ப்பாக கருதப்படுகிறது. புச்சிபாபு தொடர், துலீப் டிராபி தொடரில் அவர் விளையாட உள்ளார்.

சமீபத்தில் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் மூன்றுவிதமான பார்மெட்களிலும் விளையாட விரும்புகிறேன் எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில், சூர்யகுமார் யாதவை எப்படியாவது மூன்றுவிதமான பார்மெட்களிலும் விளையாட வைத்தாக வேண்டும் என்ற முடிவை கம்பீர்தான் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

இலங்கை தொடரில், சூர்யகுமார் யாதவ், கம்பீரின் ஆலோசனைபடி  நடந்துகொண்டதால், குட்புக்கில் இடம்பிடித்துவிட்டாராம். இதனால்தான், சூர்யகுமாரை மூன்றுவிதமான அணியிலும் கொண்டுவர கம்பீர் விரும்புவதாக பிசிசிஐ வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் வரிசையில் ஏற்கனவே கடும் போட்டி நிலவி வருகிறது. புதிதாக துரூவ் ஜோரல், சர்பரஸ் கான், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்களும் வர உள்ளனர். 

ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ராஜத் படிதர் போன்றவர்கள் பலர் இருக்கும்போது, சூர்யகுமாரையும் உள்ளே கொண்டுவர கம்பீர் முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் கருத்து வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ‘‘விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களை உள்ளூர் தொடரில் ஆட வைப்பது சரியான முடிவாக இருக்காது. அதிக சர்வதேச டெஸ்ட் போட்டிகள் இருக்கும்போது, அவர்கள் உள்ளூர் தொடர்களில் ஆடினால் காயம் காரணமாக அவதிப்பட வாய்ப்பு இருக்கிறது’’ எனக் கூறினார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ மீட்டிங்கில், கம்பீர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, இந்திய வீரர்களை கஷ்டப்பட வைக்கிறார். என்றும் தனது சொல்பேச்சை கேட்டு நடக்கும் வீரர்களுக்கு, மூன்று பார்மெட்டிலும் ரெகுலர் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறார்  என்றும் விரைவில் இதற்கு தீர்வுகான வேண்டும் என சில நிர்வாகிகள் அதிருப்தி குரலை எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!