பெட்ரோல் மற்றும் தங்கம் விலையில் திடீரென வரலாறு காணாத மாற்றம்  

  வெள்ளிக்கிழமை காலை ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது.

ஏப்ரல் 19, 2024 - 16:07
பெட்ரோல் மற்றும் தங்கம் விலையில் திடீரென வரலாறு காணாத மாற்றம்  

ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெள்ளிக்கிழமை காலை ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,400 ஆக இருந்தது.

புதிய விலையானது அண்மையில் பதிவான அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது.
  
அத்துடன், ஜப்பான், ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!