வருடத்தில் ஆரம்ப நாளிலேயே எரிபொருள் விலை உயர்வு!
எரிபொருள் விலை உயர்வு: இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
இன்று (01) அதிகாலை 5 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலை 20 ரூபாயினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 366 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.
ஒரு லீற்றர் 95 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலை 38 ரூபாயினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 464 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு லீற்றர் வெள்ளை டீசலின் விலை 29 ரூபாயினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 358 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 41 ரூபாயினால் உயர்த்தப்பட்டு புதிய விலை 475 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 11 ரூபாயினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 236 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.