எரிபொருள் பிரச்சினை: வீதிகள் மற்றும் ரயில் பாதைகளை மறித்து பல பகுதிகளில் போராட்டங்கள்

எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் பாதை ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது

ஏப்ரல் 19, 2022 - 22:00
எரிபொருள் பிரச்சினை: வீதிகள் மற்றும் ரயில் பாதைகளை மறித்து பல பகுதிகளில் போராட்டங்கள்

எரிபொருள் வழங்கக் கோரியும், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும் நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எரிபொருள் கோரி போராட்டம் காரணமாக சிலாபம் - கொழும்பு வீதி காக்கப்பள்ளியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் பாதை ரம்புக்கனை பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது

அத்துடன், கண்டியில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயங்காமல் உள்ளன.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!