ரயில் ஆசன முன்பதிவு இன்று முதல் இணையத்தில் மட்டுமே
இன்று (14) முதல் முழுவதுமாக இணையத்தின் ஊடாகவே ரயில் இருக்கை முன்பதிவு செய்யலாம் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (14) முதல் முழுவதுமாக இணையத்தின் ஊடாகவே ரயில் இருக்கை முன்பதிவு செய்யலாம் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று இரவு 7 மணி முதல் ரயில் ஆசனங்களை இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்ய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை 40 சதவீத இட ஒதுக்கீடு இணையத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முழுவதுமாக இணையத்தின் ஊடாக மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்படும்.
இணையத்தின் ஊடாக இருக்கை ஒதுக்கீடு செய்துவிட்டு பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் பெற வேண்டும் என்றாலும், இன்று முதல் இருக்கை ஒதுக்கீடு சீட்டின் புகைப்படம் இருந்தால் போதும் என ரயில்வே துறை குறிப்பிட்டுள்ளது.