பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் அதிகரிப்பு... முன்னிலையில் நான்கு மாகாணங்கள்

பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளன.

டிசம்பர் 2, 2023 - 12:21
பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் அதிகரிப்பு... முன்னிலையில் நான்கு மாகாணங்கள்

முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது வெளியான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சித்தியடைந்து உயர்தரத்துக்கு தெரிவான மாணவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “428,299 பேர் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், 90.54% சதவீதமான சித்தியடைந்தோர் எண்ணிக்கையானது மிகவும் சாதகமான நிலைமையாகும்.

பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளதுடன் முதலிடத்தை தென் மாகாணம் பெற்றுள்ளது. இது 77.57% வீதமாக வீதமாக காணப்படுகிறது.

இதையும் படிங்க: சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் இதோ!

இரண்டாவது இடத்தில் 75.10% வீத சித்தி நிலையுடன் சப்ரகமுவ மாகாணமும், மூன்றாவது இடத்தினை 74.92% வீதத்துடன் மேல் மாகாணமும், நான்காவது இடத்தினை 74.50% வீதத்துடன் வடமேற்கு மாகாணமும் பெற்றுள்ளன.

உயர்தர வகுப்பில் கல்வியை தொடர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சதவீதம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

2014 இல் 69.02% ஆகவும், 2015 இல் 69.33% ஆகவும், 2016 இல் 69.4% ஆகவும், 2017 இல் 73.05% ஆகவும், 2018 இல் 75.09% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 76.59% ஆகவும், 2015 இல் 76.59% ஆகவும், 74.59% ஆகவும் உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!