சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் இதோ!
பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று(01) வெளியானது. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 72.07 சதவீதமான மாணவர்கள் உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளதுடன்,13588 மாணவர்கள் 9 A பெறுபேற்றையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
கண்டி மகாமாயா பெண்கள் வித்தியாலய மாணவி சமாதி அனுராதா முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் அக்ஷ்யா ஆனந்த சயனன் பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரியின் ஏ.எம்.ஏ. மின்சந்து அலககோன்,பெற்றுள்ளார். நான்காவது இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரியின் துல்மினா சதீபா திஸாநாயக்க மற்றும் கம்பஹா சிறி குருசா பெண்கள் கல்லூரி மாவணர்கள் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
ஆறாம் இடத்தை காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, திருகோணமலை ஸ்ரீ சண்முகம் பெண்கள் கல்லூரி ஆகிய மாணவர்கள் பெற்றுள்ளனர். பத்தாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் பெண்களுக்கான கண்டி உயர்தரப் பாடசாலை ஆகியன பிடித்துள்ளன.