வாகன விபத்தில் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் படுகாயம்

புத்தளம் மருத்துவமனை பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில், விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலை குறித்து தற்போது எதையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

ஜுன் 29, 2023 - 19:05
ஜுன் 29, 2023 - 19:13
வாகன விபத்தில் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து, இன்று (29) அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நால்வரும் பயணித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நால்வரும் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலை குறித்து தற்போது எதையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் புத்தளம் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!