ரோயல் பார்க் கொலை வழக்கு - மைத்திரி இழப்பீட்டை செலுத்தியதாக அறிவிப்பு 

தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மார்ச் 11, 2025 - 17:12
மார்ச் 11, 2025 - 17:13
ரோயல் பார்க் கொலை வழக்கு - மைத்திரி இழப்பீட்டை செலுத்தியதாக அறிவிப்பு 

ரோயல் பார்க் கொலை வழக்கில் வழங்க உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது சட்டத்தரணி இன்று (11) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

இந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர் இந்த விவகாரம் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டத்தரணிக்கு  நீதிபதிகள் குழு அறிவித்தது.

இதேவேளை, ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது.

இதயும் படிங்க - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!