இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தான் மோதும்.. இந்த முறை இந்தியா விடாது... காரணம் இதுதான்!
ஆஸ்திரேலியா அணியிடம் ஸ்காட்லாந்து அணி தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி நமீபியா அணியை வென்று அடுத்த சுற்றுக்கு வந்து விட முடியும்.

நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பை தொடரில் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவது ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் முடிவில் இருக்கிறது.
தற்போது வலிமையான அணிகளில் இந்தியா ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. யார் இறுதிப் போட்டிக்கு வருவார்கள்? என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் பேசியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணியிடம் ஸ்காட்லாந்து அணி தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி நமீபியா அணியை வென்று அடுத்த சுற்றுக்கு வந்து விட முடியும்.
அப்படி வரும்பொழுது ஆஸ்திரேலியா இந்தியா இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரையிறுதியில் இருப்பதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.
மேலும் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரே பிரிவில் இருப்பதால் அரை இறுதியில் இந்த இரு அணிகளால் மோதிக் கொள்ள முடியாது. எனவே இந்த காரணத்தினால் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த நிலையில் கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இந்தியாவில் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
ஆனால் பிராட் ஹாக் இந்த முறை ஒருதலைப் பச்ச போட்டியாக இருக்காது என்று நம்புகிறார். இதுகுறித்து பிராட் ஹாக் கூறும்பொழுது “சூப்பர் 8 சுற்றுக்கு ஒரு பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் என்று நம்புகிறேன். மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு வரும்.
இதேபோல சூப்பர் 8 சுற்றில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் ஆஸ்திரேலியா அணியே முன்னணியில்இருக்கும். ஏனென்றால் அவர்கள் தற்போது வெஸ்ட் இண்டிஸ் சூழலில் விளையாடி மெதுவான ஆடுகளத்தை எப்படி சமாளிப்பது என்று பழகி இருக்கிறார்கள்.
அதே சமயத்தில் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி சமமானதாக இருக்கும். ஏனென்றால் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் சில போட்டிகளில் விளையாடி சூழ்நிலைக்கு இறுதிப் போட்டிக்கு முன்பாக பழகிவிடும்” என்று கூறியிருக்கிறார்.