ஐந்து பேர் சுட்டுக்கொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது
ஹம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் நேற்று (04) ஹபராதுவையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரத்கம, கட்டுடம்பே பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர்.
பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்