தேர்தல் கடமைக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

திடீரென சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மே 6, 2025 - 11:45
தேர்தல் கடமைக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக சென்ற இளம் பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிருஷாந்தி குமாரி தசநாயக்க (33) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர் கலகெதர மினிகமுவவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

திடீரென சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!