சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி தந்தை - மகள் உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கண்டி, புசல்லாவை பகுதியில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி 32 வயதான தந்தையும் 2 வயதான மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்
மரக்கறி தோட்டம் ஒன்றை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.