பில்லி, சூனிய பூஜையில் மணப்பெண் பலாத்காரம்: சாமியார் கைது

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

செப்டெம்பர் 6, 2023 - 16:20
பில்லி, சூனிய பூஜையில் மணப்பெண் பலாத்காரம்: சாமியார் கைது

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண்ணிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து இளம்பெண் தன்னுடைய தாயாரிடம் தெரிவித்தார்.

இளம்பெண்ணை அவரது தாயார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அப்போதும் இளம்பெண் உடல்நிலை சரியாகவில்லை.

இதையடுத்து கணவர் வீட்டிற்கு வந்த இளம்பெண் தனது உடல்நிலை குறித்து கணவரிடமும் அவரது மாமியாரிடமும் தெரிவித்தார்.

இளம்பெண்ணின் மாமியார் யுனானி மருந்து கடையில் வேலை செய்யும் தனக்கு தெரிந்த சாமியாரிடம் மருமகளை அழைத்துச் சென்றார். 

அங்கு இருந்த சாமியார் இளம்பெண்ணின் உடலில் 5 தீய சக்திகள் உள்ளது. தீய சக்திகளை விரட்ட பில்லி சூனிய பூஜை செய்ய வேண்டும். பந்தலகுடாவில் உள்ள தனது வீட்டிற்கு மருமகளை அழைத்து வர வேண்டும் என கூறினார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை சாமியார் வீட்டிற்கு கணவர் அழைத்துச் சென்றார்.

சாமியார் இளம்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் பூஜை செய்ய வேண்டி இருப்பதால் இளம்பெண்ணின் கணவரை வெளியே அனுப்பினார்.

அப்போது இளம்பெண்ணின் கண்களை கருப்பு துணியால் கட்டி விட்டு பூஜைகள் செய்வதுபோல் நடித்து அவரை பலாத்காரம் செய்தார்.

தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து இளம்பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் பொலிஸாரிடம் புகார் செய்ய அவர்கள் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை கைது செய்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!