இந்திய முட்டை குறித்து போலி தகவல்?
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் குறித்து இதுவரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் குறித்து இதுவரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள செய்தி குறித்து தலைவர் வலிசுந்தர கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மூன்று அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் பின்னரே இலங்கைக்கு இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே முட்டை இறக்குமதி செய்யப்படுகிறது.
இது தொடர்பாக இலங்கையில் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னரே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை விநியோகம் செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்திய முட்டைகள் குறித்து தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.