21 வயசுல எப்படி விளையாடுறான்.. இந்திய அணிக்கு நல்ல காலம்.. இங்கிலாந்து ஜாம்பவான் பாராட்டு!
இந்திய அணியின் முதல்தர கிரிக்கெட்டின் தரம் மற்றும் இளம் வீரர்களின் எழுச்சி வெளிநாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்களையே மிரள வைத்துள்ளது.

இந்திய அணியின் எதிர்காலத்திற்கான வீரராக கண்டறியப்பட்டுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வா.
அசத்தலான ஐபிஎல் தொடருக்கு பின், நேரடியாக இந்திய அணியில் இடம்பிடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே வாய்ப்பை பெற்றார். இவரை தொடக்க வீரராக விளையாட வைப்பதற்காக சுப்மன் கில்லை 3வது இடத்தில் இந்திய அணி நிர்வாகம் களமிறக்கியது.
இதன்பின் முதல் போட்டியிலேயே இமாலய சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆட்டநாயகன் விருதைய்ம் வென்று சாதனை படைத்தார்.
இதனைத்தொடர்ந்து 2வது டெஸ்டில் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாகவும் ரன்களை சேர்க்க முடியும் என்று நிரூபித்து காட்டினார். இதனால் சுப்மன் கில்லை போல் 3 வகை கிரிக்கெட்டுக்குமான வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பார்க்கப்படுகிறார்.
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு டி20 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாழையடி வாழையாக மும்பை பேட்ஸ்மேன்களின் கவுரவத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் காப்பாற்றி வருகிறார்.
சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஒரு மும்பை பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் நட்சத்திரமாக மாறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முதல்தர கிரிக்கெட்டின் தரம் மற்றும் இளம் வீரர்களின் எழுச்சி வெளிநாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்களையே மிரள வைத்துள்ளது.
ரசிகர்களுக்கு சோக செய்தி.. உலக கோப்பை தொடரில் வில்லியம்சன் இல்லை?
இரு நாட்களுக்கு முன் இந்திய முதல்தர கிரிக்கெட் செட் அப்பை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டேரன் சமி பாராட்டி பேசியிருந்தார். தற்போது இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து நாசர் ஹுசைன் பேசுகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தொடக்கம் அற்புதமாக இருந்தது. அவர் பற்றி ரிக்கி பாண்டிங்குடன் பேசினேன்.
அவர், ஜெய்ஸ்வாலால் சர்வதேச தரத்திற்கு விளையாட முடியும் என்று கூறினார். இதற்கு இந்திய முதல்தர கிரிக்கெட் தரமே காரணம். சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்திய கிரிக்கெட் உருவாக்கி வருகிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த காலம் என்று தெரிவித்துள்ளார்.