குழந்தையை கொடுத்துவிட்டு ஏமாற்றிய கிரிக்கெட் வீரர்.. வேறு ஒரு பெண்ணுடன் காதல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் 8 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை ஏமாற்றிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகஸ்ட் 13, 2023 - 12:00
ஆகஸ்ட் 13, 2023 - 12:01
குழந்தையை கொடுத்துவிட்டு ஏமாற்றிய கிரிக்கெட் வீரர்.. வேறு ஒரு பெண்ணுடன் காதல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் 8 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை ஏமாற்றிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக விளையாட்டு வீரர்கள் மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன் மாதிரியாக திகழ்வார்கள். சிலர் தங்களது வாழ்க்கையில் எத்தனை பிரச்சனை இருந்தாலும் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வழியாக துருவ நட்சத்திரமாக திகழ்வார்கள்.

ஆனால் தற்போது உள்ள தலைமுறை விளையாட்டு வீரர்கள் சர்ச்சைகளுக்கு மட்டுமே பெயர் போனவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் தற்போது இணைந்து இருக்கிறார் சர்ச்சை நாயகன் இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன். 

இவர் ஏற்கனவே இஸ்லாமிய மதத்திற்கு எதிராக சர்ச்சை கருத்தை போட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும் தடை வாங்கினார்.

ஆசஸ் தொடரில் கூட ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவை திட்டி பிரச்சினைகளை சிக்கினார். அதற்கு மன்னிப்பும் கேட்க முடியாது என்று கூறியதால் அணியில் இருந்து மறைமுகமாக நீக்கப்பட்டார். 

தற்போது மீண்டும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் ராபின்சன் இடம்பெற்றிருக்கிறார்.

அதில், ராபின்சன் லாரன் என்ற பெண்ணை எட்டு ஆண்டுகளாக காதலித்து அவருடன் லிவிங் டு கெதரில் இருந்திருக்கிறார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி லிவிங் டு கெதர் இருக்கும்போதே ஒரு குழந்தையையும் பெற்றிருக்கிறார். 

சியானா என்ற அந்த குழந்தைக்கு தற்போது இரண்டு வயதாகிறது. வரும் அக்டோபர் மாதம் லாரனுடன் திருமணம் செய்வதற்காக ஏற்பாட்டில் ராபின்சன் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் பேக்கர் என்ற பெண்ணுடன் ஆலிவ் ராபின்சனுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து இருக்கிறார்கள். 

அணி ஹோட்டலுக்கு எல்லாம் மியா பேக்கரை ராபின்சன் அழைத்து வந்திருக்கிறார். அப்போதே பல வீரர்கள் இது தவறு என்று அவரிடம் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் எட்டு ஆண்டுகளாக காதலித்த லாரனை ராபின்சன் கை கழுவி இருக்கிறார். மேலும் இரண்டு மாதத்தில் நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ள ராபின்சன் இனி தான் மியா பேக்கருடன் தான் வாழப்போவதாக அறிவித்திருக்கிறார். 

இந்த சம்பவம் இங்கிலாந்து கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!