நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்ட் ஷேரிங் நிறுத்தம்!

கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

ஜுலை 21, 2023 - 13:56
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்ட் ஷேரிங் நிறுத்தம்!

இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்ட்  ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு காரணமாக இந்திய பயனர்கள் இனி தங்களது எக்கவுன்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. 

இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தான், நெட்ப்ளிக்ஸ் சேவையில் ஒரே எக்கவுன்ட்-ஐ பலர் பயன்படுத்துவதற்கான வசதி நீக்கப்பட்டுள்ளது. 

எனினும்,  ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நெட்ப்ளிக்ஸ் எக்கவுன்ட்-ஐ அவர்களது வீடு, வெளியில் செல்லும் இடங்கள் மற்றும் பயணங்கள் என எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்தோடு, டிரான்ஸ்பர் ப்ரோபைல், மேனேஜ் அக்சஸ் மற்றும் டிவைசஸ் போன்ற புதிய அம்சங்களையும் பயன்படுத்த முடியும். 

நெட்ஃப்ளிக்ஸ்-இன் புதிய அறிவிப்பு மூலம், அந்நிறுவனம் IP முகவரி, டிவைஸ் ஐடி,  எக்கவுன்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில் எக்கவுன்ட்-ஐ யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்துகொள்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!