முட்டை விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் அறிவிப்பு
முட்டையின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முடியும் என கமத் தொழில் அமை்சசர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முட்டையின் விலையை எதிர்காலத்தில் குறைக்க முடியும் என கமத் தொழில் அமை்சசர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தி குறைந்தமையால் முட்டை விலை உயர்ந்தது, எனினும் படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வருவதால் முட்டை விலை குறைவடையும் என அமைச்சர் கூறினார்.
அத்துடன், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நெல் கொள்வனவுக்கு சந்தைப்படுத்தல் சபைக்குப் போதியளவு பணம் ஒதுக்கப்படவில்லை.
இருந்தபோதும் எதிர்பார்த்த விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.