மூன்று மாதங்களுக்கு பிறகு முட்டை, கோழியிறச்சி விலை குறையும்
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க குறைந்தது மூன்று மாதங்கள் தேவைப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கோழிப்பண்ணை தொழில் வளர்ச்சி காரணமாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.
இலங்கைக்கு முட்டைகளை தொடர்ந்து இறக்குமதி செய்வதல்ல, கால்நடை வளர்ப்புத் திட்டத்தை வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்குவதற்கான ஏற்றுமதி சார்ந்த திட்டமாக மாற்றுவதே தனது இலக்கு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு கோழிப்பண்ணை தொழில் கணிசமான பங்களிப்பை வழங்குவதுடன், நாடு கோழிப்பண்ணை உற்பத்தியில் பல வருடங்களாக நிலையான வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்த வளர்ச்சியானது முட்டை மற்றும் கோழி இறைச்சி இறக்குமதியின் தேவையை குறைப்பதற்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.