இந்தியாவில் 5.0 ரிக்டரில் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள்
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) உறுதிப்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை 2:25 மணிக்கு 16 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சேதம் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வங்காள விரிகுடாவில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதற்கு முன்பு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து லேசான நில அதிர்வு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.