இரட்டைக் கொலைச் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி
பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவர், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
பொலிஸார் அதற்கு பதிலடி கொடுத்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை விமானப்படை வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹொரண தல்கஹவில பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குறித்த நபர் பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர்.