டொலரின் பெறுமதியின் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(04)மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஏப்ரல் 4, 2024 - 18:18
டொலரின் பெறுமதியின் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(04)மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  304.56 ரூபாயாகவும், கொள்வனவு விலை 295.09 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலரின் விற்பனை விலை 226.69 ரூபாயாகவும், கொள்வனவு விலை 217.01 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 331.84 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 318.21 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

அத்துடன், ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை பெறுமதி 386.85 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி  371.82 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!