இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (ஆகஸ்ட் 21) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (ஆகஸ்ட் 21) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 293.25 முதல் ரூ. 293.40 ஆகவும், விற்பனை விலை ரூ. 302.25 முதல் ரூ. 302.40. ஆகவும் மாற்றமடைந்துள்ளது.
NDB வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 295.10 முதல் ரூ. 295.85 ஆகவும் ரூ. 303.10 முதல் ரூ. 303.85 ஆகவும் அதிகரித்துள்ளன.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 293.65 முதல் ரூ. 294.44 ஆகவும் ரூ. 304.19 முதல் ரூ. 305.00 ஆகவும் காணப்படுகின்றது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 293.21 முதல் ரூ. 294. 19 ஆகவும் ரூ. 303 முதல் ரூ. 304 ஆகவும் மாற்றமடைந்துள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 294.50 முதல் ரூ. 295 ஆகவும் ரூ. 303.50 முதல் ரூ. 304 ஆகவும் அதிகரித்துள்ளது.