இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை ரூபாயின் பெறுமதி: இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்.

இலங்கை ரூபாயின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296.92 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306.36 ரூபாய் ஆகவும் காணப்படுகின்றது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386.82 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 401.99 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326.01 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 339.89 ரூபாய் ஆகவும் காணப்படுகின்றது.
இதேவேளை, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217.33 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227.27 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195.78 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 205.90 ரூபாய் ஆகவும் காணப்படுகின்றது.
அதேநேரம், சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225.60 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 236.32 ரூபாய் ஆகவும் மாற்றமடைந்துள்ளது.