அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு
அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.63 ரூபாயாகவும், கொள்வனவு விலை 323.15 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.52 ரூபாயாகவும், கொள்வனவு விலை 232.73 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.26 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 344.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.39 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 395.84 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.